சனி நினைச்சுட்டா யார் தடுத்தாலும் அவன் நினைச்சத சாதிச்சுடுவான்
ஒருதடவை பார்வதி W/o சிவபெருமான் அழகா ஒரு மாளிகை கட்டினாங்க.... அதோட கிரஹபிரவேசத்துக்கு ஒரு ஜோசியர்கிட்ட நாள் குறிக்க சொன்னாங்க... அந்த மாளிகை கட்ட கடக்கால் போட்ட நாளை ஆராய்ஞ்ச அந்த ஜோசியர் சொன்னார்..." நீங்க இந்த மாளிகைய கட்ட கடைக்கால் போட்ட நேரம் சனி உச்சத்துல இருந்த நேரம்.. அதனால நீங்க என்னதான் அக்னி கம்பியும், அல்ட்ராடெக் சிமெண்டும் போட்டு கட்டி இருந்தாலும் இந்த மாளிகை நிலைக்காது... அதனால நீங்களே இடிச்சுடுங்க" இத கேட்ட பார்வதி செம்ம கடுப்ப்பாயிட்டாங்க.... லோகத்துக்கே பெரிய சாமியோட பொண்டாட்டி நான்.... பிசாத்து சனி என்னோட மாளிகைய இடிக்கிறதா.... நெவெர்... அப்படின்னு பொங்கல் வச்சாங்க.... புருஷன கூப்பிட்டு.... "யோவ்..... நீ இப்போவே அந்த சனிய பார்த்து..... இன்னமாதிரி எம்பொண்டாட்டி ஒரு பங்களா கட்டி இருக்கா.... அதுல நீ என்னவோ வேலை காட்ட போறியாம்... அதெல்லாம் வேண்டாம்"ன்னு சொல்லிட்டு வா" ன்னாங்க.. உடனே சிவன் சொன்னார்... புரிஞ்சுக்கோ பாரு..... நான் பெரிய சாமியா இருந்தாலும்... மத்தவங்க வேலைல குறுக்கிட்றது இல்ல.... தவிர... சனி எப்ப...