Posts

Showing posts from November, 2022

#புவியீர்ப்பு_விசையை_கண்டறிந்தது_அர்ஜுனனே

ஓங்கி உயர்ந்த ஒரு கம்பத்தின் மீது ஒரு சக்கரத்தில் பொருத்தப்பட்டு அதிவேகமாக சுழன்று கொண்டிருந்தது அந்த மீன் பொம்மை! அதற்கு கீழே ஒரு கிரிஸ்டல் க்ளியராக ஒரு செயற்கைத் தடாகம் போல ஒரு பெரிய நீர் நிரம்பிய பாத்திரம்.! மேலே தொங்கிக் கொண்டிருந்த அந்த மீன் பொம்மையின் பிம்பம் அந்த தெள்ளிய தடாகத்து நீரில் பிரதிபலிக்கிறது! போட்டி இது தான்! அந்த மீனுக்கு நேராக இல்லாமல் தரையில் அமர்ந்து வில்லை மேற்புறமாக பிடித்து கீழே நீரில் தெரியும் மீனின் பிம்பத்தை மட்டும் பார்த்து அம்பெய்தி மேலே சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் மீனை குறி தவறாமல் அடித்து வீழ்த்த வேண்டும்! பிரட்லீ, ஷோயப் அக்தர், ஷாகின் அஃப்ரீதி, மார்க் வுட்ஸ், மிட்சேல் ஸ்டார்க், போல்ட், டிம் சவுதி, ஜோஃப்ரா ஆர்ச்சர், கம்மின்ஸ்.. பும்ரா, புவனேஷ், ஷமி என பல நாட்டு வீரர்கள் முயன்றும் அம்மீனின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை! வந்தார் அர்ஜுனன்! வில்லை அநாசயமாக தூக்கி பின் விரல்களை நமது குல்தீப் யாதவின் சைனாமேன் பொசிஷனில் வைத்து நாணில் அம்பை பொருத்தி ஏய்கிறார்! அறிமுகமான முதல் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மிடில் ஸ்டம்ப் எகிறியது போல...