Posts

Showing posts from August, 2023
Image
  முருகேசு : அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ?" முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க.. 9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு..? 63 ன்னு சொன்னேன் .. அப்பா : சரி அப்புறம்... முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க .. அப்பா : அதே எழவு தானேடா. வரும்... சரி நீ என்ன சொன்ன.. ? முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க " அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன் " அடுத்த நாள், முருகேசு : அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?" அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்.. முருகேசு : சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு.. அப்பா : எதுக்குடா ? "முருகேசு : drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் .. அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்.. ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்.. அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு . அப்பா : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? ...
Image
 
  ஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்?- ஓர் அலசல் மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது. `நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்துவெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா...' - இந்தப் பாட்டை ரசிக்காத மீன் ரசிகர்கள் குறைவு. சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும்போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். அந்த அளவுக்குப் பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது மீனின் ருசி. இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள்கூட மீனை விரும்பக் காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவைதான். ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால்போதும்... மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தேபோய்விடுவார்கள். மீனுக்கும் அதன் காதலர்களுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மீன் உணவில் குழம்பு, வறுவல், புட்டு என்று பல வகைகள் இருப்பது...