#குலதெய்வம் தெரியவில்லை தெரிந்து கொள்வது எப்படி ..
குலம் என்பது தலமுறைகளை குறிக்கும் ஒரு குலம் என்பது 13 தலைமுறைகள் சேர்ந்ததாகும் ஒரு அரசமரத்தை எடுத்துக்கொள்வோம் உச்சி கிளை என்பது முதல் தலைமுறை அதாவது அப்பா அவரின் மகன் இரண்டாவது தலைமுறை கிளைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஒரு அப்பாவுக்கு மூன்று நான்ங்கு மகன்கள் இருக்கலாம் அதில் மூத்தமகன் இரண்டாவது தலைமுறையாக வருவார் இவருக்கு பிறக்கும் மூத்த மகன் மூன்றாவது தலைமுறையாகும் இப்படி 13 தலைமுறைகள் சேர்ந்ததே ஒரு வம்சம் என அழைக்கப்படுகிறது கடைசி தலைமுறை 13 வது தலைமுறையை சேர்ந்தவர் இறக்கும் பொழுது 781 வருடங்கள் என கணக்கில் வரும் இந்த 13 தலைமுறையை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக ஒரே தெய்வத்தை வணங்கி வருவார்கள் 13 தலைமுறையை சேர்ந்தவர்கள் எந்த பாப செயலையும் செய்யவில்லை என்றால் குலதெய்வ அருளுடன் எந்த இன்னல்களும் இல்லாமல் சந்தோஷமான வாழ்வு வாழ்வார்கள் ... #மண்ணாசை #பெண்ணாசை #பொன்னாசை போன்ற காரணங்களால் ஒருவரை ஒருவர் இம்சிப்பதாலும் ஏமாற்றுவதாலும் குலதெய்வம் கோபம் கொள்ளும் அப்படி கோபம் கொள்ளும் பட்சத்தில் 13 தலைமுறைகள் முழுமையாக முடிவடையாமல் தெய்வம் நம்மை விட்டு விலகிவிடும் ஆயிரம் தெய்வத்தை கும்ப...