#குலதெய்வம் தெரியவில்லை தெரிந்து கொள்வது எப்படி ..

 குலம் என்பது தலமுறைகளை குறிக்கும் ஒரு குலம் என்பது 13 தலைமுறைகள் சேர்ந்ததாகும்

ஒரு அரசமரத்தை எடுத்துக்கொள்வோம் உச்சி கிளை என்பது முதல் தலைமுறை அதாவது அப்பா அவரின் மகன் இரண்டாவது தலைமுறை கிளைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஒரு அப்பாவுக்கு மூன்று நான்ங்கு மகன்கள் இருக்கலாம் அதில் மூத்தமகன் இரண்டாவது தலைமுறையாக வருவார் இவருக்கு பிறக்கும் மூத்த மகன் மூன்றாவது தலைமுறையாகும் இப்படி 13 தலைமுறைகள் சேர்ந்ததே ஒரு வம்சம் என அழைக்கப்படுகிறது கடைசி தலைமுறை 13 வது தலைமுறையை சேர்ந்தவர் இறக்கும் பொழுது 781 வருடங்கள் என கணக்கில் வரும் இந்த 13 தலைமுறையை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக ஒரே தெய்வத்தை வணங்கி வருவார்கள் 13 தலைமுறையை சேர்ந்தவர்கள் எந்த பாப செயலையும் செய்யவில்லை என்றால் குலதெய்வ அருளுடன் எந்த இன்னல்களும் இல்லாமல் சந்தோஷமான வாழ்வு வாழ்வார்கள் ...
#மண்ணாசை #பெண்ணாசை #பொன்னாசை போன்ற காரணங்களால் ஒருவரை ஒருவர் இம்சிப்பதாலும் ஏமாற்றுவதாலும் குலதெய்வம் கோபம் கொள்ளும் அப்படி கோபம் கொள்ளும் பட்சத்தில் 13 தலைமுறைகள் முழுமையாக முடிவடையாமல் தெய்வம் நம்மை விட்டு விலகிவிடும்
ஆயிரம் தெய்வத்தை கும்பிட்டாலும் குலதெய்வ அருள் இலலாமல் போகும்.. என்னதான் திருப்பதி ஏழுமலையானையும் திருவண்ணாமலை ஈசனை வணங்கினாலும் கிரிவலம் சென்றாலும் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அதில் வரக்கூடிய அருளை குல தெய்வம் மூலமாக மட்டுமே பெறமுடியும்
குலதெய்வம் தெரியாமல் போனால் எந்த தெய்வத்தை கும்பிட்டாலும் பலனற்று விடும் ...
#குலதெய்வம் எது என அறிய பண்டைய காலகட்டத்தில் உபயோகப்படுத்திய குலதெய்வ வழிபாட்டு முறை இதோ..
அதிகாலை நேரத்தில் #பிரம்மமுகூர்த்தம் நேரம் 4:30 முதல் 5:30 க்குள் 50 மில்லி எண்ணை பிடிக்கும் அளவு மண் அகல் விளக்கு ஒன்றை வாங்கி அதில் இலுப்பை எண்ணை நல்லெண்ணை பசுநெய் மூன்றும் ஒன்றாக கலந்து தாமரை தண்டுதிரி ஒன்று பஞ்சுதிரி இரண்டு மூன்று திரிகளை ஒன்றாக இணைத்து விளக்கு ஏற்றி எனது குலதெய்வத்தை காட்டு
"ஓம் ஹிரீம் குலதெய்வாய நமஹ "
என 108 முறைகள் உச்சரித்து வரவும் தொடர்ந்து 48 தினங்கள் செய்து வர அடுத்த 48 தினங்களுக்குள் பழைய உறவினர்கள் மூலமோ அல்லது கனவு மூலமாகவோ குலதெய்வம் தெரிய வரும்
பூஜையை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் தொடங்குவது சிறப்பாகும்
அப்படி குலதெய்வம் என தெரியும் பட்சத்தில் முதல் தலைமுறைக்கான குலதெய்வத்தை காட்டிய பெருமை உங்களை சார்ந்ததாகும்..
குலதெய்வ அருளுடன் சந்தோஷமாக வாழ்வோம்

Comments

Popular posts from this blog

Boost Your Knowledge! DID YOU KNOW?

Gas Pain in Chest: Causes, Treatment, and More