Posts

Showing posts from November, 2022

புதன் பகவான் பற்றிய சில முக்கியமான தகவல்கள் பகுதி-1

Image
ஜோதிட உலகத்தில் இருக்கும் நவ கிரகங்களில் "அலி கிரகம்" ஆகிய புதன் பகவான் நம்முடைய ஜாதகத்தில் எந்த எந்த பாவத்தில் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் பிரச்சனைகள் இருக்கும் என்பதை நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். புதன் பகவானின் கால புருஷ தத்துவத்திற்கு மூன்றாம் பாவமாகிய மிதுனம் மற்றும் ஆறாம்பாவமாகிய கன்னி என்ற பாவங்களுக்கு அதிபதி யாகும்.அதே போன்று நம்முடைய ஜாதகத்தில் ஆறாம் பாவம் தான் மிக முக்கியமான கெடு பலன்களை கொண்ட பாவமாகும். அதாவது 6ம் பாவம் என்பது அசிங்கம் மற்றும் அவமானத்தை சொல்லக்கூடிய பாவமாகும்.எனவே புதன் அதற்கு அதிபதியாக வருவார். அதேபோன்று புதன் சிந்தனைகள் யோசனைகள் கற்பனைகளுக்கு அதிபதி ஆகும்.நாம் சிந்திக்கும் அத்தனை விஷயங்களும் யோசனைகளும் புதனுடைய கார கத்திற்குள் தான் வரும். அதேபோன்று நவக்கிரகங்களில் புதன் பகவான் சுப கிரகமும் கிடையாது சுப கிரகமும் கிடையாது. எனவே புதன் இரண்டிற்கும் முரண்பட்ட குணத்தை கொண்டவராவார் யார் பக்கம் சாட்சி இருக்கிறதோ அவர்களுக்கு புதன் நல்லவர் யார் பக்கம் ஒழுங்காக சாட்சி உண்மை இல்லையோ அவர்களுக்கு புதன் கெட்டவர். நல்லவருக்கு நல்லவர் கெட்டவருக்கு