புதன் பகவான் பற்றிய சில முக்கியமான தகவல்கள் பகுதி-1


♋ஜோதிட உலகத்தில் இருக்கும் நவ கிரகங்களில் "அலி கிரகம்" ஆகிய புதன் பகவான் நம்முடைய ஜாதகத்தில் எந்த எந்த பாவத்தில் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் பிரச்சனைகள் இருக்கும் என்பதை நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
🌹புதன் பகவானின் கால புருஷ தத்துவத்திற்கு மூன்றாம் பாவமாகிய மிதுனம் மற்றும் ஆறாம்பாவமாகிய கன்னி என்ற பாவங்களுக்கு அதிபதி யாகும்.அதே போன்று நம்முடைய ஜாதகத்தில் ஆறாம் பாவம் தான் மிக முக்கியமான கெடு பலன்களை கொண்ட பாவமாகும்.
🌹அதாவது 6ம் பாவம் என்பது அசிங்கம் மற்றும் அவமானத்தை சொல்லக்கூடிய பாவமாகும்.எனவே புதன் அதற்கு அதிபதியாக வருவார்.
அதேபோன்று புதன் சிந்தனைகள் யோசனைகள் கற்பனைகளுக்கு அதிபதி ஆகும்.நாம் சிந்திக்கும் அத்தனை விஷயங்களும் யோசனைகளும் புதனுடைய கார கத்திற்குள் தான் வரும்.
🌹அதேபோன்று நவக்கிரகங்களில் புதன் பகவான் சுப கிரகமும் கிடையாது சுப கிரகமும் கிடையாது.
எனவே புதன் இரண்டிற்கும் முரண்பட்ட குணத்தை கொண்டவராவார் யார் பக்கம் சாட்சி இருக்கிறதோ அவர்களுக்கு புதன் நல்லவர் யார் பக்கம் ஒழுங்காக சாட்சி உண்மை இல்லையோ அவர்களுக்கு புதன் கெட்டவர்.
🌹நல்லவருக்கு நல்லவர் கெட்டவருக்கு கெட்டவர் என்ற குணத்தை கொண்டவர் நவகிரகங்களில் புதன் பகவான் மட்டும்தான்.
🌹அதே போன்று புதன் பகவான் 6ம் பாவத்தின் பலனை தான் எந்த பாவத்தில் இருந்தாலும் கொடுப்பார்.
ஆறாம் பாவம் என்பது அசிங்கம் மற்றும் அவமானத்தை கொடுக்கக்கூடிய பாவமாகும்.
🌹எனவே புதன் எந்த பாவத்தில் இருந்தாலும் அந்த பாவம் சார்ந்த விஷயங்கள் மூலம் நமக்கு ஒரு அசிங்கத்தையும் ஒரு அவமானத்தையும் கண்டிப்பாக கொடுப்பார் அதேபோன்று புதன் எந்த பாவத்தில் எல்லாம் இருக்கின்றதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களில் நமக்கு யோசனைகள் கற்பனைகள் சிந்தனைகள் மிக அதிகமாக இருக்கும்.
🌹எனவே 12 பாவங்களில் புதன் எந்தெந்த பாவத்தில் இருந்தால் எந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கும் என்பதை நாம் ஒவ்வொரு பாவமாக இப்பொழுது பொருத்தி பார்க்கலாம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♋(லக்னத்தில் "புதன் பகவான்")
♦யாருக்கெல்லாம் லக்னத்தில் புதன் இருக்கின்றதோ அவர்கள் கண்டிப்பாக அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய ஓரு அசிங்கத்தையும் அவமானத்தையும் வாழ்நாளில் சந்திக்க நேரிடும்.
அது எந்த விஷயமாகவும் இருக்கலாம் ஆனால் அடிக்கடி மற்றவர்கள் மூலம் அடிக்கடி ஒரு அசிங்கத்திற்கும் ஒரு அவமானத்திற்கும் கண்டிப்பாக இவர்கள் ஆளாவார்கள்.
♦இவர்கள் என்றைக்குமே இவர்களின் மூளையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் எதையாவது ஒன்றை யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.கற்பனை ஆற்றல்கள் சிந்திக்கும் ஆற்றல்கள் இவர்களுக்கு என்றைக்குமே மிக அதிகமாக இருக்கும்.எப்போதுமே இவர்கள் எதையாவது ஒன்றை யோசித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
♦மேலும் யாருக்கெல்லாம் லக்னத்தில் புதன் இருக்கின்றதோ இவர்கள் என்றைக்குமே இவர்கள் வாழ்க்கையில் ஒரு தெளிவான முடிவை எடுக்க மாட்டார்கள்.
♦இவர்களும் வாழ்க்கையில் ஒரு தெளிவான முடிவு எடுக்க மாட்டார்கள் அடுத்தவர்களையும் இவர்கள் வாழ்க்கையில் ஒரு தெளிவான முடிவை எடுக்க விடமாட்டார்கள் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் இருப்பது தான் இவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே.
♦இவர்களால் ஒரு அசிங்கத்தையும் ஒரு அவமானத்தையும் என்றைக்குமே தாங்கவே முடியாது அதேசமயம் யாராவது ஆணவத்தில் ஆடினால் இவர்களுக்கு பிடிக்காது.
♋(2ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் இரண்டாம் பாவத்தில் புதன் இருக்கின்றதோ இவர்களின் குடும்பம் சார்ந்து தான் இவர்களின் மூளை என்றைக்குமே யோசித்துக் கொண்டிருக்கும்.உறவுகள் சார்ந்த விஷயத்தையும் தன்னுடைய குடும்பம் சார்ந்த விஷயத்தையும் பற்றிதான் இவர்கள் அதிகமாக யோசித்து கொண்டு இருப்பார்கள்.
♦அதேபோன்று இவர்கள் குடும்ப உறவுகள் மூலமாக ஒரு அசிங்கத்திற்கும் ஒரு அவமானத்திற்கும் அடிக்கடி இவர்கள் ஆளாகிக் கொண்டே இருப்பார்கள்.
அது எதுவாக இருக்கலாம் ஆனால் குடும்ப உறவுகள் மூலமாக இது போன்ற பிரச்சனையகள் இவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.
♦அதேபோன்று வருமானம் சார்ந்த விஷயங்களின் மூலமாக ஒரு அசிங்கத்திற்கும் ஒரு அவமானத்திற்கும் இவர்கள் ஆளாவார்கள்.சம்பாதிக்கக்கூடிய பணத்தை சேமிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுபவர்கள் இவர்கள்தான்.
இவர்கள் கையில் பணம் தங்க அது நிற்காது.
♋(3ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் 3ம் பாவத்தில் புதன் இருக்கின்றதோ
இவர்கள் இளைய சகோதரர் மூலமாகவும் நெருங்கிய நண்பர்கள் மூலமாகவும் ஒரு அசிங்கத்திற்கும் ஒரு அவமானத்திற்கும் கண்டிப்பாக இவர்கள் ஆளாவார்கள்.
♦கண்டிப்பாக இளைய சகோதரர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மூலம் இவர்கள் ஏமாற்றப்படுவார்கள் இவர்களால் பிரச்சினைகளையும் அவமானங்களையும் கண்டிப்பாக இவர்கள் சந்திப்பார்கள்.
♦சமூக வலைதளங்களில் அதிகமாக செயல்படுபவர்கள் இவர்கள்தான்
எந்த நேரமும் ஏதாவது ஒரு சமூக வலைத்தளத்தில் தான் இருப்பார்கள் இதை சார்ந்த கற்பனைகள் ஆசைகள் யோசனைகள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.
♋(4ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦நான்காம் பாவத்தில் யாருக்கெல்லாம் புதன் இருக்கின்றதோ அவர்கள் வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு இந்த விஷயங்கள் மூலமாகவும் அதே போன்று தாய், தாய் வழி உறவினர்கள் மூலமாகவும் ஒரு அசிங்கத்திற்கும் ஒரு அவமானத்திற்கும் கண்டிப்பாக இவர்கள் அடிக்கடி ஆளாவார்கள்.
♦எப்பொழுதுமே வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு இந்த விஷயங்கள் மீது இவர்களுக்கு யோசனைகள் ஆசைகள் கற்பனைகள் மிக அதிகமாக இருக்கும் இந்த விஷயங்கள் பற்றி இவர்கள் எப்போதுமே யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.
♦வீடு, சொத்து இந்த விஷயங்களில் அடுத்தவர்களால் இவர்கள் கண்டிப்பாக ஏமாற்றப்படுவார்கள்.
இது போன்ற பிரச்சினைகளை இவர்கள் அனுபவிக்கக் கூடிய சூழ்நிலைகள் இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்
♋(5ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் புதன் ஐந்தாம் பாவத்தில் இருக்கின்றதோ அவர்களுக்குக் காதல், காமம் ,குழந்தைகள்,ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள், பூர்வீக சொத்து
இந்த விஷயங்கள் சார்ந்து இவர்கள் அடிக்கடி ஒரு அசிங்கத்துக்கும் ஒரு அவமானத்திற்கும் மற்றவர்களால் கண்டிப்பாக இவர்கள் ஆளாவார்கள்.
♦பெற்ற குழந்தைகள் மூலமாகவும் இவர்கள் ஒரு அசிங்கத்திற்கும் ஒரு அவமானத்திற்கும் வாழ்க்கையில் ஆளாவார்கள்.காதல் காமம் சார்ந்த விஷயங்கள் மூலமாகவும் இவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளில்
சிக்குவார்கள்.
♦காதல்,காமம் ,உடலுறவு,ஆன்மீகம், குழந்தைகள்,சினிமா,விளையாட்டு,
அழகு சார்ந்த விஷயங்களை தங்களை அழகுப்படுத்திக் கொள்வது
இந்த விஷயங்கள் மீது இவர்களுக்கு யோசனைகள் ஆசைகள் கற்பனைகள் மிக அதிகமாக இருக்கும் இந்த விஷயங்கள் பற்றி இவர்கள் எப்போதுமே யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.
♋(6ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦ஆறாம் பாவத்தில் யாருக்கெல்லாம் புதன் இருக்கின்றதோ அவர்கள் கடன் வம்பு ,வழக்கு, பிரச்சினைகள், சீட்டு, ஏலம் ,நகைகளை அடமானம் வைப்பது, உத்தியோகம், தேர்வுகள்
இந்த விஷயங்கள் சார்ந்து இவர்கள் அடிக்கடி ஒரு அசிங்கத்துக்கும் ஒரு அவமானத்திற்கும் மற்றவர்களால் கண்டிப்பாக இவர்கள் ஆளாவார்கள்.
♦இவர்கள் கடன் கொடுத்தால் அந்தப் பணம் இவர்களுக்கு திரும்ப வராது இவர்கள் கடன் வாங்கினார்கள் என்றால் அந்தக் கடனை இவர்களால் அடைக்க முடியாது.சீட்டு ,ஏலம், loan வீட்டு கடன்,நகைகளை அடமானம் வைப்பது வட்டிக்கு விடும் தொழில் வட்டிக்கு வாங்கும் தொழில் இதுபோன்று என்றைக்குமே இவர்கள் செய்யக்கூடாது மீறி செய்தார்கள் என்றால் தேவையில்லாத பிரச்சனைகளில் கண்டிப்பாக சிக்குவார்கள்.
♦அதேபோன்று இது சார்ந்த விஷயங்களைப் பற்றி இவர்களுக்கு யோசனைகள் கற்பனைகள் மிக அதிகமாக இருக்கும்.
♦Credit cardஐ இவர்கள் வாங்கக்கூடாது வாங்கினார்கள் என்றால் பிரச்சனைகளில் சிக்குவார்கள்,share market, stock market ,trading இது போன்றவற்றில் இவர்கள் என்றைக்குமே பணத்தை முதலீடு போட கூடாது மீறி செய்தார்கள் என்றால் கண்டிப்பாக இவர்கள் பிரச்சனைகளில் சிக்குவார்கள்.
♦அதே போன்று இவர்கள் உத்தியோகத்தில்(job) இருந்தார்கள் என்றால் இவர்களுக்கு எந்தவித முன்னேற்றம் இருக்காது உழைப்புக்கு தகுந்தவாறு திறமைக்குத் தகுந்தவாறு சம்பள உயர்வும் பதவி உயர்வும் இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள்.
♋(7ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦யாருடைய ஜாதகத்தில் என்ன ஏழாம் பாவத்தில் புதன் இருக்கின்றதோ அவர்களுக்கு திருமண வாழ்க்கை, திருமண வரன் சார்ந்த விஷயங்கள் மூலமாக அசிங்கத்திற்கும் அவமானத்திற்கும் கண்டிப்பாக ஆளாவார்கள்.
♦திருமண வாழ்க்கை சார்ந்த விஷயங்களைப் பற்றிதான் இவர்கள் என்றைக்குமே அதிகமாக யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
♦மேலும் இவர்கள் என்றைக்குமே கூட்டுத் தொழில்(partnership business) செய்யக்கூடாது செய்தால் கண்டிப்பாக ஏமாற்றப்படுவார்கள்.
அல்லது நஷ்டம் அடைவார்கள்.
♋(8ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦எட்டாம் பாவத்தில் யாருக்கெல்லாம் புதன் இருக்கின்றதோ அவர்கள் ஆணாக இருந்தார்கள் என்றால் மனைவி, மனைவி சார்ந்த குடும்ப உறவுகள் மூலமாக ஒரு அசிங்கத்திற்கும் ஒரு அவமானத்திற்கும் கண்டிப்பாக இவர்கள் ஆளாவார்கள்.
♦அதே இவர்கள் பெண்ணாக இருந்தார்கள் என்றால் கணவன் மற்றும் கணவனுடைய குடும்ப உறவுகள்.மூலமாக ஒரு அசிங்கத்திற்கும் ஒரு அவமானத்திற்கும் கண்டிப்பாக இவர்கள் ஆளாவார்கள்.
♦மேலும் எட்டாம் பாவத்தில் புதன் இருப்பவர்கள் அமானுஷ்யம் ஜோதிடம் ,சித்தர்கள்,ஞானிகள், ஜீவசமாதி, இதிகாசக் கதைகள் இதனை சார்ந்த விஷயங்களைப் பற்றி அதிகமாக யோசித்துக் கொண்டிருப்பார்கள்.அதேபோன்று ஆயுள் சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு பயம் அதிகமாக இருக்கும்.
♋(9ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦ஒன்பதாம் பாவத்தில் யாருக்கெல்லாம் புதன் இருக்கின்றதோ அவர்கள் தந்தை தந்தை வழி குடும்ப உறவினர்கள் இவர்கள் மூலமாகவும் அதேபோன்று தந்தையுடைய சொத்து சார்ந்த விஷயங்கள் மூலமாகவும் தொலைதூரப் பயணம், உயர்கல்வி, மேற்படிப்பு,வெளிநாட்டு பயணம் அதாவது இது போன்ற விஷயங்கள் மூலமாக இவர்கள் வாழ்க்கையில் ஒரு அசிங்கத்திற்கும் ஒரு அவமானத்திற்கும் கண்டிப்பாக இவர்கள் அடிக்கடி ஆளாவார்கள்.
♦தந்தை தந்தையுடைய சொத்து தொலைதூரப் பயணம் வெளிநாட்டுப் பயணம் உயர்கல்வி அதாவது இது போன்ற விஷயங்களைப் பற்றி அவர்கள் அதிகமாக யோசித்துக் கொண்டே இருப்பார்கள் இந்த விஷயங்கள் மீது அதிகமான யோசனைகள் கற்பனைகள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.
♋(10ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் பத்தாம் பாவத்தில் புதன் இருக்கின்றதோ அவர்கள் தொழில் சார்ந்த விஷயங்கள் மூலமாக ஒரு அசிங்கத்திற்கும் ஒரு அவமானத்திற்கும் கண்டிப்பாக அடிக்கடி ஆளாவார்கள்.
♦தொழில் சார்ந்து இவர்கள் அடுத்தவர்களால் கண்டிப்பாக ஏமாற்றப்படுவார்கள்.தொழில் சார்ந்த விஷயங்களில் சில பேர் இவர்களுக்கு சில வாக்குறுதிகளை கொடுத்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இவர்களை ஏமாற்றி விடுவார்கள்.
♦தொழில் சார்ந்த விஷயங்களில் ஆசைகள் யோசனைகள் கற்பனைகள் சிந்தனைகள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும் எப்போதுமே இவர்கள் தொழிலைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
♋(11ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦பதினோராம் பாவத்தில் புதன் இருந்தால் மூத்த சகோதரர்கள் மற்றும் சித்தப்பா இவர்களின் மூலம் ஒரு அசிங்கத்தையும் ஒரு அவமானத்தையும் சந்திக்க நேரிடும்.
♦மேலும் இவர்கள் இவரிடம் ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய சொன்னாள் அந்த விஷயத்தை ஒரு முறைக்கு இரண்டு முறை கள ஆய்வு செய்து யோசித்து சிந்தித்து பிறகு அந்த விஷயத்தை செய்ய வேண்டும்.
இல்லையென்றால் மிகப்பெரிய ஒரு பிரச்சனையும் ஏமாற்றத்தையும் இவர்கள் சந்திக்க நேரிடும்.
♋(12ம் பாவத்தில் "புதன் பகவான் ")
♦புதன் 12 ஆம் பாவத்தில் இருந்தால்
கடன், சீட்டு, ஏலம், loan, sharemarket stockmarket, trading இவற்றை சார்ந்த விஷயங்களின் மூலம் இவர்களுக்கு விரயச் செலவுகள் என்பது இருக்கும்.
♦மேலும் புதன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் கடன், சீட்டு, ஏலம் இது சார்ந்த விஷயங்களில் இவர்கள் போக கூடாது.மற்றும் இதனை சார்ந்து இவர்கள் கவனமாகவே இருக்க வேண்டும்.
♦மேலும் இவர்களுக்கு அயன சயன போகம் மற்றும் காமம் சார்ந்த விஷயங்கள் ,சுகபோகம் சார்ந்த விஷயங்கள் ,வெளிநாட்டு வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் இதனை சார்ந்து இவர்களுக்கு எண்ணங்களும் சிந்தனைகளும் யோசனைகளும் இருந்து கொண்டே இருக்கும்.
♦மேலும் இது சார்ந்த விஷயங்களில் இவர்கள் ஈடுபடும் போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து சிந்தித்து செயல்பட வேண்டும்.யோசிக்காமல் இது சார்ந்த விஷயங்களில் இவர்கள் ஈடுபட்டார்கள் என்றால் மாட்டிக்கொள்வார்கள் இல்லையென்றால் பிரச்சினைகள் ஏற்பட்டு விடும்.

Comments

Popular posts from this blog

"ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்"