ஹீமோகுளோபின் பற்றாக்குறை சரிசெய்யும் சூப்பர் உணவுகள் என்னென்ன...
- Get link
- X
- Other Apps
ஹீமோகுளோபின் குறைபாடு பிரச்சினை ரத்த செல்களில் சிதைவு, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி குறைபாடு, ரத்த உற்பத்தி குறைபாடு அனீமியா என்னும் ரத்த சோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன. இந்த ஹீமோகுளோபின் குறைபாட்டு பிரச்சினையை எப்படி சரிசெய்யலாம்? என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

- ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்றாலே அது வெறும் ரத்த சோகை பிரச்சினை தான் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் ஹீமோகுளோபின் குறைபாடு என்பது வெறும் ரத்த சோகை பிரச்சினையை மட்டுமே சார்ந்தது கிடையாது. அதைத் தாண்டி நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

இரும்புச்சத்து நம்முடைய உடலுக்கு மிகவும் அடிப்படையாகத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துக்களுள் ஒன்று. இது நம்முடைய உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரைிக்கச் செய்வதோடு ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.
இறைச்சி, மீன், முட்டை, சோயா உணவுகள், உலர் பழங்கள், கீரைகள், நட்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.
19 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 8 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அதேபோல 19 - 50 வயதுடைய பெண்களுக்கு ஒரு நாளைக்கு 8 மில்லிகிராம் அளவு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
வைட்டமின் சி உணவுகள்

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமானால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் நாம் என்ன தான் அதிகமாக வைட்டமின் சி உணவுகளை எடுத்துக் கொண்டாலும் அதை நம்முடைய உடல் சரியாக உறிஞ்சுகிறதா என்பது தான் மிக முக்கியம்.
பொதுவாக இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகள் உடலில் வைட்டமின் சியை உறிஞ்ச உதவியாக இருக்கும். அதனால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, அதோடு சேர்த்து இரும்புச் சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சிட்ரஸ் பழங்கள், பச்சை காய்கறிகள், இலைவடிவ காய்கறிகள், ஸ்டிராபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்கள் ஆகியவற்றில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் உண்ணும் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளில் உள்ள அயர்னை நம்முடைய உடல் வேகமாக உறிஞ்சிக் கொள்ளும். இதனால் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்கப்படும்.
ஃபோலிக் அதிகமுள்ள உணவுகள்

வைட்டமின் பி9 தான் நாம் ஃபோலிக் அமிலம் என்று குறிப்பிடுகிறோம். இந்த ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது ரத்த சோகை பிரச்சினையைச் சரிசெய்வதோடு, ஹீமோகுளோபினையும் அதிகரிக்கச் செய்கிறது.
தண்ணீர் சத்துக்கள் அதிகம் கொண்ட வைட்டமின் என்றால் அது வைட்டமின் பி9 தான். இது நம்முடைய உடலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
ஒரு நபருக்கு தினசரி 400 மைக்ரோ கிராம் அளவுக்கு ஃபோலிக் அமிலங்கள் உடலுக்குத் தேவைப்படுகின்றன.
ஃபோலிக் அமிலத்தின் அளவு உடலில் குறையும்போதும் கூட ஹீமோகுளோபின் பற்றாக்குறை உண்டாகும். ஹேீமோகுளோபினை உற்பத்தி செய்வதற்கும் இந்த ஃபோலிக் அமிலம் தேவைப்படுகிறது.
அரிசி சாதம், மாட்டிறைச்சி, நிலக்கடலை, கிட்னி பீன்ஸ், லெட்யூஸ், அவகேடோ ஆகிய உணவுகளில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் நிறைந்திக்கிறது.
வைட்டமின் பி12

வைட்டமின பி12 அனீமியா என்னும் ரத்தசோகை பிரச்சினையைத் தீர்க்க உதவுகிறது. மற்ற வைட்டமின் உணவுகளைக் காட்டிலும் வைட்டமின் பி12 உணவுகள் சில குறிப்பிட்ட உணவு வகைகளின் மூலம் மட்டுமே கிடைக்கக்கூடியனவாக இருக்கின்றன.
குறிப்பாக சில விலங்குகளின் மூலங்களில் இருந்து இந்த வைட்டமின் பி12 கிடைக்கிறது. இறைச்சி, முட்டை, விலங்குகளின் ஈரல், இறால் போன்ற இறைச்சிகளில் இருந்து வைட்டமின் பி12 அதிகமாகக் கிடைக்கிறது.
ஒருவேளை வெஜிடேரியனாக இருந்தால் பால் பொருள்களை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.
சப்ளிமண்ட்டுகள்

மேலே குறிப்பிட்டஉணவுகளை எடுத்துக் கொள்வது மட்டுமே போதுமானதாக இருக்காது. ஏனெனில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் குறிப்பிட்ட அளவு நம்முடைய அன்றாட செயல்பாடுகளுக்கு எனர்ஜியாக மாற்றப்பட்டு விடும்.
இதையெல்லாம் கடந்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்ய அயர்ன் மற்றும் .போலிக் அமிலங்கள் நிறைந்த சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது.
தவிர்க்க வேண்டியவை

நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும் என்று அதிக அளவு காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதால் அவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு குறைந்து கொண்டே போகும்.
அதுபோல அதிக தீயில் வைத்து வேகமாக உணவுகளைச் சமைப்பதை விட, குறைந்த தீயில் சமைக்க வேண்டும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் என்ன...?

- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment