ஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்?- ஓர் அலசல்

மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது.
`நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்துவெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா...' - இந்தப் பாட்டை ரசிக்காத மீன் ரசிகர்கள் குறைவு. சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும்போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும்.
அந்த அளவுக்குப் பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது மீனின் ருசி. இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள்கூட மீனை விரும்பக் காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவைதான்.
ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால்போதும்... மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தேபோய்விடுவார்கள். மீனுக்கும் அதன் காதலர்களுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
மீன் உணவில் குழம்பு, வறுவல், புட்டு என்று பல வகைகள் இருப்பதுபோல மீன்களிலும் கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன் என்று பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நீர் நிலைகளிலிருந்தும் கிடைக்கும் மீனுக்கென்று தனிப் பெயர்களும், தனி ருசியும் உண்டு. அதுபோல் அவற்றின் ஊட்டச்சத்துகளும் சிறிது மாறுபடும் ASSS
``மீன் உணவு அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது. கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்கள் போன்றவை வளர்வது வெவ்வேறு சூழலில் உள்ள நீர் நிலைகளில்தான் என்றாலும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மீனில் புரதச் சத்து மிகவும் அதிகம், மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. இதனால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உணவாக மீன் உள்ளது.
ஆற்று மீன் மற்றும் கடல் மீன் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால்
ஆற்று மீன், ஏரி மீன்கள் எல்லாம் ஆறு, குளம், ஏரிகளில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொண்டு வளரும். ஆனால், கடல் மீன்கள் கடலில் வளரும் கடல்பாசிகளை உட்கொண்டு வளர்வதால் அவற்றில் ஒமேகா-3 போன்ற குறிப்பிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. மீன்கடல்பாசிகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் (Fatty Acid), புரதச் சத்தும் அதிகம் உள்ளது. எனவே, இவற்றைச் சாப்பிட்டு வளரும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 உள்ளது. ஆனால், ஆற்று மீன்களில் இந்தக் கொழுப்பு அமிலம் காணப்படுவதில்லை. குறிப்பாகக் கடல் மீன்களில் பெரிய மீன்களைவிடச் சிறிய மீன்களில்தான் இந்த ஒமேகா-3 நிறைந்துள்ளது. உதாரணமாக மத்தி, காணங்கெளுத்தி, சங்கரா போன்ற மீன்களில் ஒமேகா-3 அதிகம் உள்ளது.
இந்த ஒமேகா-3 உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகவும் சிறந்தது. இது உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக்கொள்கிறது. இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்துக்கும், மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இந்தக் கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது. மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.மீன்ஆனால் மத்தி, சங்கரா போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்களில் இருந்து மீன் வாடை அதிகம் வருவதாலும், அவற்றில் முள் அதிகம் உள்ள காரணத்தாலும் பெரும்பாலானோர் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கின்றனர். உண்மையில் பெரிய மீன்களில் உள்ளவற்றைக் காட்டிலும் இவற்றில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆற்று மீன்களோடு ஒப்பிடும்போது கடல் மீன்களில் சிறிது உப்பு அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவை உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் பாதிக்காது.

Comments

Popular posts from this blog

Boost Your Knowledge! DID YOU KNOW?

Gas Pain in Chest: Causes, Treatment, and More