இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். - “வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.” “அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”. “இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க. இவங்கள நாங்க “Client”னு சொல்லுவோம். “சரி” - இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales Consultants, Pre-Sales Consultants. …”. இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், “...
Posts
Showing posts from June, 2026
- Get link
- X
- Other Apps
நாம் வணங்கும் கடவுள்கள் வேற்றுகிரகவாசிகளா? வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சிகள் சென்ற நூற்றாண்டிலிருந்தே நடந்துவருகின்றன. பறக்கும் தட்டுகள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. தற்கால ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தற்போது இதுவரை வெளிவராத பல உண்மைகளை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். அவை பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட கருத்தை நிலை நிறுத்துவதாகவே அமைகின்றன. அதாவது பூமியானது வேற்றுக்கிரகவாசிகளின் தேவை நிமித்தம் உருவாக்கப்பட்டது. மனிதர்களை படைத்தது வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களே என்பதே அது. பண்டைய காலங்களில் பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்ததற்கான ஆதாரங்கள் பூமி முழுவதும் உள்ளன. அப்படி என்றால் அவர்கள் ஏன் வந்தார்கள்? பூமியில் அவர்களுக்கு என்ன தேவை இருந்தது? மனிதர்களை எப்படி உருவாக்கினார்கள்? இப்போது அவர்கள் எங்கே? இவ்வாறான பல கேள்விகளோடு, வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய பல இரகசியங்களுக்கும் ஆய்வாளர்கள் விடை கூற முற்பட்டுள்ளனர் அவை பற்றி பார்க்கலாம். (உலக அளவிலான ஊடகங்கள் இவற்றை பரபரப்பாக விவாதித்து வருகின்றன. நமது தமிழ் ஊடகங்கள் அரசியல் தவிர எதையும் விவாதிப்பதில்ல...