நாம் வணங்கும் கடவுள்கள் வேற்றுகிரகவாசிகளா?
வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சிகள் சென்ற நூற்றாண்டிலிருந்தே நடந்துவருகின்றன. பறக்கும் தட்டுகள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. தற்கால ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தற்போது இதுவரை வெளிவராத பல உண்மைகளை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். அவை பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட கருத்தை நிலை நிறுத்துவதாகவே அமைகின்றன. அதாவது பூமியானது வேற்றுக்கிரகவாசிகளின் தேவை நிமித்தம் உருவாக்கப்பட்டது. மனிதர்களை படைத்தது வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களே என்பதே அது.
பண்டைய காலங்களில் பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்ததற்கான ஆதாரங்கள் பூமி முழுவதும் உள்ளன.
அப்படி என்றால் அவர்கள் ஏன் வந்தார்கள்? பூமியில் அவர்களுக்கு என்ன தேவை இருந்தது? மனிதர்களை எப்படி உருவாக்கினார்கள்? இப்போது அவர்கள் எங்கே?
இவ்வாறான பல கேள்விகளோடு, வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய பல இரகசியங்களுக்கும் ஆய்வாளர்கள் விடை கூற முற்பட்டுள்ளனர் அவை பற்றி பார்க்கலாம். (உலக அளவிலான ஊடகங்கள் இவற்றை பரபரப்பாக விவாதித்து வருகின்றன. நமது தமிழ் ஊடகங்கள் அரசியல் தவிர எதையும் விவாதிப்பதில்லை. கிணற்று தவளைகளாகவே நம்மை வைத்திருக்கின்றன). பிரபஞ்சம் உருவாகிய பின்னர் பல பில்லியன்கள் வருடங்கள் சென்ற பின்னரே பூமி உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமி உருவாகும் முன்பே பிரபஞ்சம் தோன்றியது என்றால், ஏற்கனவே உருவான பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்களில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்வது சாத்தியம். அவ்வாறு வாழ்ந்தவர்களே பூமியில் மனித இனத்தை தோற்றுவித்தவர்கள் என தற்போது ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றார்கள். இந்த கருத்தை ஆய்வாளர்கள் நிறுவும் ஆதாரபூர்வமான தகவல்களைப் பார்க்கலாம். ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் தமது கடவுள்கள் வானில் இருந்து வந்தவர்களாக நம்புகின்றனர். அவ்வாறு வந்தவர்கள் வேற்றுக்கிரகவாசிகளே என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இன்று காணப்படும் ஒவ்வோர் நாகரீங்களுக்கும் பண்டைய காலத்தில் பிரமீடுகள் போன்ற பிரம்மாண்டமான கட்டங்கள், மத ரீதியான கட்டிடங்கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய தொழில்நுட்பத்திற்கு சாத்தியமற்ற வகையில் கட்டப்பட்டு உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மர்மம் நிறைந்த நாஸ்கா கோடுகள், ஸ்டோன் ஹென்ச் (Stonehenge) போன்றவை இன்றும் உலகின் பல பகுதிகளில் திடீர் திடீரென தோன்றும் விஞ்ஞான ரீதியாக விடைகாண முடியாத ‘பயிர் வட்டங்கள்’ என பல மர்மங்கள் இன்றைய தொழில்நுட்பத்திற்கு சாத்தியப்படாதவை. சுமேரிய கல்வெட்டுக்கள் மற்றும் மாயன்கள் கல்வெட்டுக்களில் விண்வெளி நவீன கால விண்வெளி வீரர்கள் அணியும் தலைக்கவசம் அணிந்த பல உருவங்கள் காணப்படுகின்றன (புகைப்படங்களில் காணலாம்) இவ்வாறான மர்மங்கள் நிறைந்த இடங்கள் வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களின் வாழ்ந்த இடங்களாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் வாதம். ஆனால் காலப்போக்கில் அவை கடவுள்களின் இருப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது அப்போதைய நாகரீகம் தனது தலைவனை கடவுளாக பாவித்தாலேயே இந்த வகையில் கடவுள்கள் தோன்றியதாக கூறப்படுகின்றது. இவை தவிர பூமி முழுதும் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பிலான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராயும் ஆய்வாளர்கள் நாம் வணங்கும் (இந்து மத) கடவுள்கள் வேற்றுகிரகவாசிகள்தான் என்பது வரை ஆராய்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் நூல்கள் கட்டுரைகள் என பல ஆதாரங்களை சேகரித்து வைத்துள்ளனர்.. அதாவது நம்முடைய ‘ஜீன்’ மாற்றப்பட்டதே அவர்களால்தான். இல்லையெனில் சின்பன்சியின் ஒரு பிரிவாக விலங்குகளாகத்தான் வாழ்ந்திருப்போம். சின்பன்சிக்கும் நமக்கும் சிறிதளவுதான் ஜீன் வேறுபடும். ஆனால் அறிவாற்றல் பல மடங்கு மாறுபட்டிருக்கும். பரிணாம வளர்ச்சி கால இடைவெளியில் இத்தகைய அறிவாற்றல் இவ்வளவு குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்ததை விஞ்ஞானிகள் புரியாத புதிராகவே கருதுகின்றனர். மனிதனின் ‘ஜீன்’ திடீரென மாற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவே கருதுகின்றனர். ஆனால் அன்றைய நாட்களில் வாழ்ந்த மனிதர்களால் வேற்றுகிரகவாசிகளின் மிக ஆதீத தொழில்நுட்பங்களை புரிந்துகொள்ள இயலாததால் அவர்கள் அன்றைய அறிவுக்கு எட்டிய வரை அன்று நடந்த சம்பவங்களை மாயாஜாலங்களாக கடவுள் சக்திகளாக புராணங்களாக வடித்துள்ளனர். உதாரணமாக பிரம்மாஸ்திரம் (அணு குண்டு, மகாபாரத போர் நடந்த இடமான குருசேத்திரத்தில் இன்றும் அணுஆயுத எச்சங்கள் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது), விநாயகர் தலை யானை போல மாற்றியது (பிளாஸ்டிக் சர்ஜரி அல்லது ஏர் கிளினிங் மாஸ்க்காககூட இருந்திருக்கலாம்), செயற்கை கருத்தரிப்பு (கௌரவர்கள் பிறப்பு) என பலவவற்றை கூறலாம்.
இன்றும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஈராக், எகிப்து என உலகின் பல இடங்களில் அகழ்வாராய்சிகளில் சிவலிங்கங்கள், விநாயகர் சிலைகள், சங்கு சக்கரங்களுடன் கூடிய விஷ்னு சிலைகள் கிடைத்திருக்கின்றன. மாயன்கள், சுமேரியர்கள், எகிப்தியர்களின் கலாச்சார சின்னங்கள் கடவுள்கள் பெரும்பாலானவை நமது இந்திய கலாச்சாரத்துடன் ஒத்து போகின்றன. இப்போது ஈராக் என்று அழைக்கப்படும், முன்னர் மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட இடத்தில் ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுமேரியர்களின் கடவுள் அனுனாக்கியும், இந்துக்களின் கடவுள்களில் ஒருவரான கருடாழ்வாரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். இவ்வாறு ஆதியில் வந்த வேற்றுகிரகவாசிகள் பல குழுக்களாக பிரிந்து நம் கிரகத்தில் ஆராய்ச்சி போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காக பல காலம் தங்கியிருந்து நம்முடைய மரபணுக்களை மாற்றியவர்கள் பிறகு தங்களது கிரகத்திற்கு சென்று விட்டனர். அவர்கள் அந்தந்த குழுக்கள் ஒவ்வொரு வகையான தொழில்நுட்ப எச்சங்களை விட்டு சென்றவற்றை நம்முடைய மனித தனக்கு எட்டிய அறிவைக்கொண்டு கண்டுபிடிப்புகளாக, வேற்றுகிரகவாசிகள் வாழ்வை முழு தொழில்நுட்பங்கள் விளங்கிக்கொள்ளாததால் மாயா ஜாலங்களுடன் கூடிய புராண கதைகளாக வடித்தனர். இவை வெவ்வேறு வேற்றுகிரகவாசிகள் குழுக்கள் வாழ்ந்த இடங்களுக்கு ஏற்ப மாறுபட்டு காணப்பட்டன. வேற்றுகிரகவாசிகள் வடித்த கோள்கள், பிரபஞ்சம் பற்றி ஆராய்சிகளை முழுமையாக புரிந்து கொள்ளா முடியாமல். குறிப்பிட்ட கோள்களை ஆராய்ந்தவர்களை அந்த கோள்களின் பெயர்களைக் கொண்ட கடவுள்களாகவும் கோள்கள் சுழற்சியினால் மனித உடல் மற்றும் மனங்களில் (மூளை) நிகழும் மாற்றங்கள் பற்றிய (வேற்றுகிரகத்தவர்கள் விட்டுச்சென்ற) ஆராய்ச்சிகளைக் கொண்டு ஜோதிட சாஸ்திரம் என உருவாக்கினர். (அமாவாசை பௌர்ணமிகளில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடு, உயிருக்கு போராடும் வயதானவர்கள் அமாவாசை பௌர்ணமி சமயங்களில் இறந்துவிடுதல் போன்ற அனுபவங்கள் மற்றும் அச்சமங்களில் கடல் சீற்றம், நவீன விஞ்ஞானம் கண்டுபிடிப்பின்படி வியாழன், சனி கிரகங்கள் சுழற்சி சூரியனின் சுழற்சியையே பாதிக்கிறது அப்படியெனில் பூமியைவிட 1200 மடங்கு பெரிய வியாழன் 300 மடங்கு பெரிய சனி ஆகிவற்றின் சுழற்சி பூமியை பாதிக்கும் அவ்வாறே பூமியில் ஜனிக்கும் உயிர்களின் எண்ணங்களை பாதிக்கும் எவ்வாறெனில் உயிர் ஜனித்து வெளி உலக சுவாசத்திற்கு வரும்போது அதன் மூளையிலுள்ள செல்களின் அணுக்கள் இயக்கம் பெறும் போது வெளியில் பாதிக்கும் பூமியீர்ப்பு விசை சந்திரன் மற்ற கோள்களின் விசை ஆகியற்றிற்கேற்ப மூளையின் செல்கள் மாற்றங்களை சந்திக்கின்றன. இது இன்றைய அறிவியலில் முழுமையாக இன்னும் தருவிக்கப்படாமல் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளன. இதுவே ஜோதிட சாஸ்திரம்).
இந்த மாற்றங்களை சரி செய்ய வேற்றுகிரகவாசிகளை கடவுள்களாக வணங்க ஆரம்பித்தனர் நம்மவர் ஒருசிலர் அவர்களின் தொழில் நுட்பங்களை ஓரளவு தெளிவுபடுத்தி பூமியில் எந்தெந்த இடங்களில் இதுபோன்ற கோள்களின் தாக்கம் குறைவு எவ்வகையான கட்டுமான அமைப்புகளினால் இதற்கு தீர்வு காணமுடியும் என நிர்மானிக்கக் கற்றுக்கொண்டு (நம்ம பகுதிகளில்) கோவில்கள், (எகிப்து சுமேரிய பகுதிகளில்) பிரமீடுகள் என அமைத்தார்கள். இன்றும் ஈராக், பெரு, எகிப்து போன்ற பகுதிகளில் நமது கோவில்கள் போன்ற எச்சங்கள் இருக்கின்றன. பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் ஏன் வருகைத் தரவேண்டும்?
இந்த கேள்விக்கு முழுமையாக யாராலும் விடை தர இயலவில்லை. ஆனால் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் அனுமானத்தின் அடிப்படையில் சில ஆதாரங்களை முன்வைத்து ஒரு சில கருத்தாக்கங்களை முன்வைக்கிறார். அதில் ஒன்றுதான் Zecharia Sitchin என்ற ஆய்வாளரின் ஆராய்ச்சி முடிவுகள். (வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வர இதுவே முழுமையான காரணங்கள் என்று கூற முடியாது).
Zecharia Sitchin ஆராய்ச்சி பற்றி காண்போம்:
அமெரிக்கா நிலவில் கால் பதித்தது முதல் நிலவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிலவு முழுதும் ஹிலியம் 3 (Helium 3) எனப்படும் கணிமம் நிறைந்துள்ளதாக கண்டுபிடித்தனர். நிலவில் மட்டுமல்லாது எமது சூரிய குடும்பத்தில் உள்ள பல கிரகங்களில் இதே வகை கணிமம் இருப்பதனையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஹிலியம் 3 கணிமம் ஆனது சிறந்த எரிபொருள் ஆகும். இதனால் பூமியில் ஏற்படும் எரிபொருள் பற்றாக்குறையை பூமிக்கு அருகில் உள்ள நிலவில் இருந்து எடுத்து வந்து பயன் படுத்தும் ஆய்வில் சர்வதேசம் முனைப்பு காட்டுகின்றது. இதே போன்று ஆரம்பகால பூமியில் மனிதர்கள் இல்லாத போது பூமியில் இருந்து வேற்றுக்கிரகவாசிகள் ஓர் கணிமத்தை எடுத்துக் கொண்டு போக வந்திருக்கலாம் என ஆய்வாளர் தெரிவிக்கின்றார். அவ்வாறு அவர்கள் வந்ததற்கான ஆதாரங்களே இப்போது பூமி முழுவதும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. மேலும், பூமியில் இருந்து வேற்றுக்கிரகவாசிகள் தங்கம் எனப்படும் கணிமத்தையே கொண்டு செல்ல பூமிக்கு வந்திருக்கலாம் எனவும் அவர் கூறுகின்றார். ஆரம்பகாலத்தில் தங்கம் பூமியில் நிறைந்து வழிந்தது என்பதை வரலாறுகளும், புராணங்களும் கூறுகின்றன. அப்படி என்றால் அவை இப்போது எங்கே?
தங்கம் எனப்படும் மதிப்பு மிக்க கணிமம் வேற்றுக் கிரகவாசிகள் பூமியில் இருந்து கொண்டு சென்றுள்ளனர் என்கிறார் ஆய்வாளர் Zecharia Sitchin. அதனை அவர்கள் தங்களின் மின்சாரத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம் எனவும் அவர் கூறுகின்றார்.
தங்கம் எனப்படுவது மின்சாதனங்களை (சேர்க்கிட்) செய்வதற்கு சிறந்த பொருள். தங்கம் சிறந்த மின் கடத்தி. அது மட்டுமல்லாது விண்வெளி ஓடங்களை நிர்மானிப்பதற்கும் தங்கம் மிக மிக முக்கியமானது. அதேபோல் தங்கம் எக்காலத்திலும் அழியாத உலோகம் எனப்படுவதோடு தங்கம் மின் சாதன உற்பத்திக்கு மிக முக்கியம்.
இவ்வாறான தங்கத்தை கொண்டு செல்வதற்காகவே பூமிக்கு வேற்றுக் கிரகவாசிகள் வந்திருக்கலாம் என்பதும் Zecharia Sitchinன் கருத்து. அதற்கான ஆதாரங்களை பல புத்தகங்கள் மூலம் அவர் நிருவுகின்றார். இதனை நிரூபிக்கும் வகையில் 90,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்கச் சுரங்கங்கள் தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 வருடங்கள் பழைமை வாய்ந்த தங்கச் சுரங்கம் இன்றும் ‘பெரு’ நாட்டில் உள்ளது. மனித நாகரீகம் அற்ற காலத்தில் இப்படியான தங்கச் சுரங்கம் எப்படி வந்தது என்பதை ஆழ சிந்திக்கும் போது வேற்றுக்கிரகவாசிகள் காரணம் வந்து போகின்றது. இவ்வாறான பல இடங்கள் பூமி எங்கும் உள்ளன. நாகரீகமே வளராத காலத்தில் மனிதன் தங்கத்தை தோண்டி எடுத்தான் என்பது வேடிக்கையான விடயமே. இதனை மேலும் வலுப்படுத்துகின்றது ‘பெரு’வில் நாஸ்கா எனப்படும் தளம். மனிதர்கள் இன்று வாழாத இந்த இடம் பற்றிய இரகசியம் இன்றும் வெளிப்படுத்தப்பட வில்லை. (இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது) சுமார் 500 சதுர கி.மீ பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த இடம். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஓர் விமான ஓடு தளம். அப்போதைய மனிதர்களால் இதனை அமைப்பது எந்த வகையிலும் சாத்தியம் அற்றது. அக்காலத்திற்கு விமானத்தளம் என்பது அவசியமே இல்லை.
வானில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் வகையில் பிரம்மாண்டமான சித்திரங்கள் இங்கு வரையப்பட்டுள்ளன. இவை வானில் இருந்து வரும் விண்கலங்களுக்கு விடுக்கப்படும் சமிச்ஞைகளாகவே காணப்படுகின்றன.
இந்த நாஸ்கா தளம் மூலம் பூமியில் இருந்து தங்கம் கொண்டு செல்லப்பட்டிருக்க முடியும் என்பது Zecharia Sitchinன் வாதம். இதனை பல ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
இன்றும் விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவின் NASA அமைப்பு வேற்றுகிரகவாசிகள் பற்றிய பல ஆராய்ச்சிகளை ரகசியமாக செய்து வருகிறது. வேற்றுகிரகவாசிகள் இன்றும் பூமியை ரகசியமாக வலம் வருவதற்கான பல வலுவான ஆதாரங்கள் இருப்பினும் அவற்றை வெளியிட NASA மறுப்பதன் மர்மம் என்ன?
1969லேயே நிலவிற்கு மனிதர்களை அனுப்பிய NASA பல மடங்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஏன் மனிதனை அனுப்பவில்லை? இதற்கு பதிலாக வேற்றுகிரகவாசிகள் இடையூறு என்று ஒரு சிலரும், வேற்றுகிரகவாசிகளுடன் ரகசிய தொடர்பு கொண்டு வெளி உலகிற்கு தெரியாமல் சந்திரன் செவ்வாய் உள்ளிட்ட கொள்களுக்கு மனிதர்களை அனுப்பி வருகிறது என்று ஒரு சிலரும் இரு வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு இருக்குமாயின் வேற்றுகிரகவாசிகள் பற்றிய தகவல்கள் ஏன் மறைக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்கூட (26.06.2017) பிரபல ‘விஞ்ஞானி நீல் டி கிராஸ்ஸி டைசன்’ அவர்கள் “இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் தனியாக இல்லை வேற்றுகிரகவாசிகள் உள்ளனர். இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம்” என கூறியுள்ளார்.
வேற்றுகிரகவாசிகள் நமது அருகிலேயே நம் கண்களுக்கு புலப்படாமல் வேறு ஒரு பரிணாமத்தில் இருக்கலாம் எனவும் ஒரு கருத்தும் நிலவுகிறது.
ர.சங்கர்.
See less

Comments
Post a Comment